தாவரவியல் - உயிரியியல் பொது அறிவு
- முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு
- நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு
- முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு
- கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா
- பின்னுகொடி தாவரம் - அவரை
- ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை
- பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்
- டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்
- தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்
- பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.
- தாவரங்கள் சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.
- பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்f
- இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்
- டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்
- முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்
- நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்
- ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்
- படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்
- மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி
- அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்